பிரபல நடிகை பாவனாவை பல்சர் சுனில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காட்சிகள் அடங்கிய நினைவக அட்டை (Memory card) பொலிசில் சிக்கியுள்ளது.
இந்த காட்சிகளை பார்த்து பொலிஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமாக விளங்கியவர் நடிகை பாவனா.
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த பெப்ரவரி 17ம் திகதி படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது ஒரு கும்பல் பாவனாவை காரில் கடத்தியது.காருக்குள் அவரை அந்த கும்பல் பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாவனாவின் கார் சாரதி மார்ட்டின், முன்னாள் கார் சாரதி பல்சர் சுனில் உள்பட 7 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது தொடர்பாக பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகை பாவனாவை காரில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போது அதை பல்சர் சுனில் அவரின் கைப்பேசியில் படம் பிடித்தது தெரியவந்தது.
கைப்பேசி குறித்து பல கட்டமாக விசாரணையில் இறங்கிய போதும், அந்த கைப்பேசியை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்சர் சுனில் சிறையில் இருந்து நடிகர் திலீப்புக்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில் திலீப்பை சந்திக்க கொச்சி காக்கநாட்டில் உள்ள கடைக்கு சென்றதாக குறிப்பிட்டு இருந்தார்.
காக்கநாட்டில் திலீப் மனைவி காவ்யாமாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது.
எனவே அந்த கடையில் கைப்பேசி அல்லது அதில் உள்ள நினைவக அட்டையை (Memory card) கொடுத்து வைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகித்தனர்.
எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு காவ்யா மாதவனின் நிறுவனம் மற்றும் வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ஒரு நினைவக அட்டையை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நினைவக அட்டை (Memory card) குற்றப்பிரிவு ஐ.ஜி. தினேந்திர கஷ்யப், டிஐஜி லோக்நாத் டெக்ரா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
நினைவக அட்டை (Memory card)யில் என்ன இருக்கிறது என்று அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர்.
அதில் இருந்து காட்சிகளை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. நினைவக அட்டையில் (Memory card) காரில் வைத்து பாவனாவை கொடூரமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடியவையாக இருந்தன.
பாவனா வழக்கில் இது முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், இந்த சம்பவத்தில் மலையாள திரையுலகம், அரசியலை சேர்ந்த மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆகவே இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் தப்பிவிடக்கூடாது என்பதால் மிக கவனமாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய நபர்களுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் கிடைத்ததும், அவர்களை கைது செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர்கள் திலீப், நாதிர்ஷா, காவ்யா மாதவனின் தாய் ஷியாமளா, மற்றொரு முன்னணி நடிகை உள்பட 6 பேரிடம் மீண்டும் பொலிசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.
இந்த விசாரணைக்கு பிறகு முக்கிய நபர்கள் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.