நீதிமன்றத்தின் இடைக்கால தடை காரணமாக குப்பைகளை அகற்றும் பணிகள் மோசமாக பாதிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
முத்துராஜவெலயில் கொழும்பின் குப்பைகளை கொட்டுவதற்கு நேற்று கொழும்பின் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது.
இந்த தடை எதிர்வரும் 20ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க நீதிமன்றங்களின் இடைக்கால தடை உத்தரவுகள், டெங்கு தொற்று அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில் நிலைமையை மோசமாக்கும் என தெரிவித்துள்ளார்.
எனவே நீதிமன்றங்கள், தேசிய பிரச்சினைகள் குறித்து உத்தரவுகளை வழங்கும் போது சகல விடயங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.