முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதக் கருத்துக்கள் தற்போது பௌத்த சம்மேளனங்களையும் உசுப்பேற்றிவிட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை உறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்கு இனவாதிகள் தயாராகிவிட்டார்கள்.
கடந்த ஜூலை 3ஆம் திகதி திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேதினத்திற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டமாக அது அமைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை துண்டாடவே முயற்சி செய்கின்றது.
அரசாங்கத்திற்கு பல வழிகளிலும் பங்காளியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியல் தீர்வு தொடர்பாக கூறும் கருத்துக்களைப் பார்க்கும்போது அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அதற்கு சமஷ்டி என்ற சொல்லைக் கூறி குழப்பியடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறுவதாக மஹிந்த கூறுகின்றார்.
சிங்கள மக்களுக்கு புதிய அரசியலமைப்பானது ‘ஏக்கியராஜிய’ என்ற ஒற்றையாட்சிப் பதத்தைக் கூறினாலும், அது தனி நாட்டுக்கு ஒப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றும் கபடத்தனமான அரசியலமைப்பாகும் என்றும் கூறியிருந்தார்.
மறுபக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பௌத்த அமைப்பான கண்டி அஸ்கிரிய பீடமும், ஏனைய பௌத்த பீடங்களும் இணைந்து புதிய அரசியலமைப்பை எதிர்க்கப் போவதாக சூழுரைத்துள்ளன.
இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது புதிய அரசியலமைப்பு ஒன்று அமுல்படுத்தப்படுவதற்கான புறச்சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தாமலே, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி அரசியல் தீர்வை தமிழ்மக்களுக்கு வழங்கப்போவதாகக் கூறிவருகின்றது.
நிலத்தைப் பண்படுத்தாமல் விதையைப் போடுவதைப்போல்,சிங்கள மக்களை தெளிவுபடுத்தாமல், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தப்போவதாக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு கூறுவது சர்வதேச அழுத்தங்களிலிருந்து தாம் தப்பித்துக்கொள்வதற்கே தவிர, உண்மையாக தீர்வொன்றை முன்வைப்பதற்காக அல்ல என்பதையே இந்தச் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
புதிய அரசியலமைப்பானது, தேர்தல் முறைமை மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது,அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பரிந்துரைப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதில் பிரதமரின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், ஜனாதிபதியின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், இதே பகுதியில் ஏற்கனவே ஆராய்ந்திருக்கின்றோம்.
சுருக்கமாகக் கூறுவதானால் தேர்தல் முறைமையில் மாற்றம் தேவை என்பதை பிரதமரும், ஜனாதிபதியும் விரும்புகின்றார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் பிரதமருக்கு விருப்பமாக இருக்கின்றபோதும், ஜனாதிபதியின் பக்கமிருந்து வெளிப்படையான விருப்பம் வெளிப்படவில்லை என்றே கூறப்படுகின்றது.
அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில முயற்சிகளை வெளிப்படுத்தியபோதும், ஜனாதிபதி அதற்கான தனது பங்களிப்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றும் தெரியவருகின்றது.
இந்த நிலையில் தேர்தல் முறைமை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு ஆகியவற்றுக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்று கூறும் பௌத்த பீடங்கள், அரசியல் தீர்வுக்கான வரைபை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்கள்.
அன்மையில் சுதந்திரக் கட்சியினரைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியபோது அவர்கள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறிய சில மணி நேரத்திற்குள்ளேயே சுதந்திரக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.
இந்தச் சம்பவமானது தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளையும். அதில் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. அதாவது மூடிய அறைகளுக்குள் கை குழுக்கியும், சிரித்த முகத்தோடும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதபோல் காட்டிக்கொள்ளும் எந்தத் தரப்பும் வெளிப்படையாக உண்மையாக இல்லை.
ஜே.வி.பியுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அவர்களும் புதிய அரசியலமைப்புக்கு தமது இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். உண்மையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாடு இதற்கு மாறுபட்டதாகவே இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை மூடிய அறைக்குள் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியலமைப்பு தீர்வு தொடர்பாக குறிப்பிட்டவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சமஷ்டி அடிப்படையில் தீர்வு கிடைக்காது என்றும், வடக்கு கிழக்கு இப்போதைக்கு இணையாது என்றும் கூறியதுடன் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியிருந்தார். ஆனாலும் அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கும் தீர்வுத்திட்டத்தின் உள்ளடக்கம் என்பதை எவராலும் புரிந்தகொள்ள முடியும்.
பொதுவாக அரசியலமைப்பு தீர்வுத் திட்ட விடயங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே தனி ஒரு ஆளாக முழுமையாக ஈடுபட்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனுக்குக் கூட சுமந்திரன் கூறுவதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கக்கூடும்.
இந்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலமைப்பில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதும். அதில் எவ்வாறான பரிந்துரைகளுக்கு சுமந்திரன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் என்பதும் தெளிவற்றதாகவே இருப்பதாக கூறியிருக்கின்றார்கள். அவ்வாறெனின் அரசியலமைப்பின் வரைபு பகிரங்கப்படுத்தப்படும் பொழுது,பௌத்த பீடங்கள் எதிர்ப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு தரப்பினரே அதை எதிர்த்துக்குரல் கொடுக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
அரசியலமைப்பு வரைபானது இரகசியமாக தயாரிக்கப்பட்டு, நாட்டு மக்களின் தலையில் கட்டிவிடும் விடயமல்ல. அது சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெளிவூட்டப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறில்லாமல் மாயா ஜாலத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நல்லாட்சி அரசாங்கம் கனவு காணுமாக இருந்தால் அது சாத்தியமாகாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதக் கருத்துக்கள் தற்போது பௌத்த சம்மேளனங்களையும் உசுப்பேற்றிவிட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை உறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் நிலையில் புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடுவதற்கு இனவாதிகள் தயாராகிவிட்டார்கள். கடந்த ஜூலை 3ஆம் திகதி திருகோணமலையில் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். மேதினத்திற்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ நடத்திய கூட்டமாக அது அமைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை துண்டாடவே முயற்சி செய்கின்றது. அரசாங்கத்திற்கு பல வழிகளிலும் பங்காளியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசியல் தீர்வு தொடர்பாக கூறும் கருத்துக்களைப் பார்க்கும்போது அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அதற்கு சமஷ்டி என்ற சொல்லைக் கூறி குழப்பியடிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறுவதாக மஹிந்த கூறுகின்றார். சிங்கள மக்களுக்கு புதிய அரசியலமைப்பானது ‘ஏக்கியராஜிய’ என்ற ஒற்றையாட்சிப் பதத்தைக் கூறினாலும், அது தனி நாட்டுக்கு ஒப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றும் கபடத்தனமான அரசியலமைப்பாகும் என்றும் கூறியிருந்தார். மறுபக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பௌத்த அமைப்பான கண்டி அஸ்கிரிய பீடமும், ஏனைய பௌத்த பீடங்களும் இணைந்து புதிய அரசியலமைப்பை எதிர்க்கப் போவதாக சூழுரைத்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது புதிய அரசியலமைப்பு ஒன்று அமுல்படுத்தப்படுவதற்கான புறச்சூழலை இந்த அரசாங்கம் ஏற்படுத்தாமலே, புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தி அரசியல் தீர்வை தமிழ்மக்களுக்கு வழங்கப்போவதாகக் கூறிவருகின்றது. நிலத்தைப் பண்படுத்தாமல் விதையைப் போடுவதைப்போல்,சிங்கள மக்களை தெளிவுபடுத்தாமல், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தப்போவதாக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு கூறுவது சர்வதேச அழுத்தங்களிலிருந்து தாம் தப்பித்துக்கொள்வதற்கே தவிர, உண்மையாக தீர்வொன்றை முன்வைப்பதற்காக அல்ல என்பதையே இந்தச் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. புதிய அரசியலமைப்பானது, தேர்தல் முறைமை மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது,அரசியல் பிரச்சினைக்கு தீர்வை பரிந்துரைப்பது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் பிரதமரின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், ஜனாதிபதியின் அக்கறைக்குரிய விடயதானங்கள் எவை என்பதையும், இதே பகுதியில் ஏற்கனவே ஆராய்ந்திருக்கின்றோம். சுருக்கமாகக் கூறுவதானால் தேர்தல் முறைமையில் மாற்றம் தேவை என்பதை பிரதமரும், ஜனாதிபதியும் விரும்புகின்றார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதில் பிரதமருக்கு விருப்பமாக இருக்கின்றபோதும், ஜனாதிபதியின் பக்கமிருந்து வெளிப்படையான விருப்பம் வெளிப்படவில்லை என்றே கூறப்படுகின்றது. அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில முயற்சிகளை வெளிப்படுத்தியபோதும், ஜனாதிபதி அதற்கான தனது பங்களிப்பை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தவில்லை என்றும் தெரியவருகின்றது. இந்த நிலையில் தேர்தல் முறைமை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு ஆகியவற்றுக்கு தாம் எதிர்ப்பு இல்லை என்று கூறும் பௌத்த பீடங்கள், அரசியல் தீர்வுக்கான வரைபை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்கள். அன்மையில் சுதந்திரக் கட்சியினரைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடியபோது அவர்கள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறிய சில மணி நேரத்திற்குள்ளேயே சுதந்திரக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதையே தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலியுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தது. இந்தச் சம்பவமானது தற்போது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீர்வுக்கான முயற்சிகளையும். அதில் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. அதாவது மூடிய அறைகளுக்குள் கை குழுக்கியும், சிரித்த முகத்தோடும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதபோல் காட்டிக்கொள்ளும் எந்தத் தரப்பும் வெளிப்படையாக உண்மையாக இல்லை. ஜே.வி.பியுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அவர்களும் புதிய அரசியலமைப்புக்கு தமது இணக்கத்தைத் தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். உண்மையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாடு இதற்கு மாறுபட்டதாகவே இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை மூடிய அறைக்குள் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியலமைப்பு தீர்வு தொடர்பாக குறிப்பிட்டவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சமஷ்டி அடிப்படையில் தீர்வு கிடைக்காது என்றும், வடக்கு கிழக்கு இப்போதைக்கு இணையாது என்றும் கூறியதுடன் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறியிருந்தார். ஆனாலும் அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத் தருவதற்கு முயற்சிக்கும் தீர்வுத்திட்டத்தின் உள்ளடக்கம் என்பதை எவராலும் புரிந்தகொள்ள முடியும். பொதுவாக அரசியலமைப்பு தீர்வுத் திட்ட விடயங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே தனி ஒரு ஆளாக முழுமையாக ஈடுபட்டிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனுக்குக் கூட சுமந்திரன் கூறுவதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கக்கூடும். இந்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலமைப்பில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதும். அதில் எவ்வாறான பரிந்துரைகளுக்கு சுமந்திரன் இணக்கம் தெரிவித்திருக்கின்றார் என்பதும் தெளிவற்றதாகவே இருப்பதாக கூறியிருக்கின்றார்கள். அவ்வாறெனின் அரசியலமைப்பின் வரைபு பகிரங்கப்படுத்தப்படும் பொழுது,பௌத்த பீடங்கள் எதிர்ப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு தரப்பினரே அதை எதிர்த்துக்குரல் கொடுக்கும் நிலை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அரசியலமைப்பு வரைபானது இரகசியமாக தயாரிக்கப்பட்டு, நாட்டு மக்களின் தலையில் கட்டிவிடும் விடயமல்ல. அது சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தெளிவூட்டப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறில்லாமல் மாயா ஜாலத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நல்லாட்சி அரசாங்கம் கனவு காணுமாக இருந்தால் அது சாத்தியமாகாது.