`ஓரம்போ’, `வா குவார்ட்டர் கட்டிங்’ ஆகிய படங்களை தொடர்ந்து புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்திப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வரும் நிலையில் படத்தை வருகிற ஜுலை 7-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தை கடந்த 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 3-7 ஆம் தேதி வரை திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த வாரம் ரிலீசாகவிருந்த படங்கள் அனைத்தும் தள்ளிப்போயின. அதன்படி `விக்ரம் வேதா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற 21-ஆம் தேதி வெளியக இருக்கிறது.