மூன்று சிறுமிகளை துஸ்பிரயோகப்படுத்திய சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் மரபணுவை பரிசோதனை செய்து, இரண்டு வாரங்களுக்கு அறிக்கையை வழங்குமாறு மூதூர் நீதவான் நீதிமன்றம், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளின் வீடியோ சாட்சியங்களை பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.