சவால்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்தில் இருந்து நான் வெளியேறியிருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சவால்கள் மற்றும் விமர்சனங்களை அச்சமின்றி எதிர்கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அரசாங்கம் தனது பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வெலிகந்தை, சிங்கப்புர பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியை அன்று பெரிய அவமதிப்புகளுக்கு அவமரியாதைக்கும் உட்படுத்திய போதிலும் இன்று உலகம் அவருக்கு மரியாதை செய்கிறது.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மாத்திரமல்லாது மக்களின் வாழ்க்கை வலுப்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகள் நாட்டில் உருவாக வேண்டும்.
அதற்கு தேவையான தைரியத்தையும் வலுவையும் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் பொலன்நறுவைக்கு செய்ய முடியாது போன பல வேலைகளை தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது.
பொலன்நறுவை மாவட்டத்தை நாட்டில் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றியமைப்போம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.