நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப் கைதாகியுள்ளார்.
இந்நிலையில், திலீப்பை கைது செய்வதற்கு சில முக்கிய காரணங்கள் சாதகமாக இருந்ததாக பொலிஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பாவனாவின் புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டு திலீப்பின் நெருங்கிய உறவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
திலீப்புக்கு நெருக்கமானவர்கள் உடன் திலீப் நடத்திய மொபைல் போன் உரையாடல்கள்.
பல்சார் சுனில் சில முக்கிய ரகசிய தகவல்களை சிறையில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடன் கைதிகள் வேடத்திலிருந்த அவர்கள் பொலிசார் அனுப்பிய நபர்கள்.
பல்சாருக்கும், திலீப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள்.
திலீப் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான நாதிர்ஷா கூறிய முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்.
பாவனா கடத்தல் விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஆன்றோ ஜோசப் தகவல் தெரிவித்தபோது 12 நொடியில் தொலைபேசியை துண்டித்த திலீப்.
விசாரணையை தடம் மாற்ற திலீப் தயாரித்து வெளியிட்ட கடிதம், பின்னர் அதே கடிதம் குறித்து பொலிசாரிடம் புகார் என இவை அனைத்தும் நடிகர் திலீப் கைதாக முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.