இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் 12.5 மற்றும் 9.5 கடற்மைல் தொலைவில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், மீன்பிடிக்காக அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடித்துறை பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினருக்கு எதிராக ஐ. நாவில் முறையிடப்போகிறோம்! தமிழக மீனவர் அமைப்பு
இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்தினால் தமக்கு நீதி கிடைக்காதுபோனால் சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்போவதாக தேசிய கடற்றொழிலாளர் பேரவை
எச்சரித்துள்ளது இந்த செய்தியை தெ ஹிந்து வெளியிட்டுள்ளது.
பேரவையின் தலைவர் எம் இளங்கோவை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது இலங்கையின் கடற்படையினரால் இதுவரை 500 தமிழக மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர் எவ்வித குற்றங்களும் செய்யாத நிலையில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மையிலும் ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் எனினும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தமிழக பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கைகள் எதனையும்
எடுக்கவில்லை.
எனவே இந்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் முறையிடவுள்ளதாக இளங்கோ தெரிவித்துள்ளார்.