Loading...
நாட்டின் ஏனைய பகுதிகளை போன்று, வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் உட்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Loading...
மேலும், வட. மாகாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பிரதமர், இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பில் விளக்கமளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
Loading...