நாடாளுமன்ற உறுப்பினர், சசிகலா புஷ்பாவின் வழக்கை அவசரமாக விசாரணை செய்ய முடியாது எனவும் பதிவாளர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் நடைமுறைக்கு அமைய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சசிகலா சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதால் அவரை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும், கட்சி தாவல் தடை சட்டம் சசிகலாவிற்கு பொருந்தாது என்றும் அவர் சார்பான சட்டத்தரணி வீரேஷ் சாரியா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், அந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணி வீரேஷ் சாரியா மன்றை கேட்டுக்கொண்டார்.
இந்த மனு மீதான விசாரணையில், பதிவாளர் அலுவலகத்தில் மனு முறையாக பட்டியலிடப்படும் போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.