கடந்த இரண்டு வருடங்களாக சீனாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவில்லை என ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பு பிரச்சினைகளிலிருந்து புலனாவதாக கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பத்திரிகை ஒன்றினூடாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த சீனாவின் மிகச் சமீபத்தய மனித உரிமை அறிக்கை மதிப்பீட்டிலிருந்து இந்த விவகாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையின் பிரகாரம், கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனாவில் சில சாதகமான முன்னேற்றங்கள் இருந்த போதிலும் மனித உரிமைக்கான ஒட்டுமொத்த செயற்பாடுகள் எதிர்திசையில் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் சீனாவுடன் விவாதிப்பதற்கு வெட்கப்பட மாட்டோம் என ரூடோ அரசாங்கம் முன்னரே வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
சீனா மற்றும் கனடாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறிதத பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.