நாடாளுமன்ற ஒழுக்கத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடும் தண்டனை வழங்க தேவையான சட்டம் உருவாக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற செய்தியாளர்களுக்காக களுத்துறையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தம்மிக்க தசநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
உத்தேச நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தை திருத்தும் போது அரச நிதி, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டங்களில் ஊடகவியலாளர்களை அனுமதிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.