இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்த விலகி, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலிக்கு, தகுந்த ஆலோசனைக் கூறி வருகிறார் டோனி. இதனால் விராட் கோலியின் கேப்டன் பணி எளிதாகியுள்ளது என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே கூறியுள்ளார்.
இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘டோனி அணியுடன் உள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் எங்களுடன் இருப்பது அதிர்ஷ்டம். விராட் கோலியுடன் டோனி இருப்பது, விராட் கோலிக்கு மிகவும் எளிதாக உள்ளது. விராட் கோலி டோனியிடம் சென்று ஆலோசனைக் கேட்கிறார். அவரது சிறந்த ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றுவதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது’’ என்றார்.