மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களுக்கு அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, டிசம்பர் 5ம் திகதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஓபிஎஸ் அணியினர் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சை குறித்து குற்றச்சாட்டுகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்த ஆவணங்கள் முறையாக உள்ளன. கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாரும் தலையிடவும் இல்லை, எங்களை கட்டுப்படுத்தவும் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைந்தால் விசாரணை எதிர்கொள்ளத் தயார் என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.