செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்கி, அந்த துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு அதை வைத்து படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், வீட்டில் பணம் சேரும்.
அனுமனுக்கு ஒரஞ்ச் நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.
மல்லிகை எண்ணெயை மனநிலையை மேம்படுத்த உதவுவது. இத்தகைய சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, மிகவும் நல்லது.
செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் ஆகியவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம்.