இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் தன்னுடைய வாழ்க்கையை அமைதியான முறையில் வாழ்வதற்கு அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. கொஞ்சம் நினைத்து பாருங்கள் உடை, இருப்பிடம் இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையின் தரத்தை மட்டுமே சொல்கிறது.
ஆனால் உணவு என்பது எல்லா ஜீவராசிகளும் வாழ்வதற்கு முக்கியமான அடிப்படை தேவையாகும். எனவே தான் அன்னதானம் என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதில் அன்னம் என்பது உணவு மற்றும் தானம் என்பது மற்றவருக்கு கொடுத்தல் என்று பொருள்.
உணவை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதே உன்னதமான தானமாகும் எனவே தான் தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில் அன்னத் பவனி பூதனி என்று கூறுகிறார். இதற்கு என்ன பொருள் என்றால் இந்த உலகத்தில் பசியில் வாடும் உயிர்களுக்கு உணவிட்டால் பிறவி கர்மாக்களை வெற்றி கொள்ளலாம் என்று சொல்கிறார்.
நீங்கள் அன்னதானம் என்றதும் புரிந்து கொள்வது மனிதர்களுக்கு உணவளிப்பதை மட்டும் ஆனால் அன்ன தானம் என்பது இந்த உலகத்தில் வாழும் பறவைகள், விலங்குகள் அனைத்திற்கும் உணவளிப்பதாகும். இனி அன்னதானத்தின் முக்கியத்துவம் பற்றி இந்து மதத்தில் சொல்லப்படும் கதைகளை பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவி இருவரும் பகடை விளையாடிக் கொண்டு இருந்தனர். விளையாட்டின் படி தோற்பவர்கள் தன்னிடம் உள்ள எல்லா வற்றையும் கொடுத்து விட வேண்டும். இதன் படி சிவன் தன்னிடம் உள்ள அனைத்து பொருட்கள் மற்றும் பிச்சை பாத்திரம் முதல் அனைத்தும் கொடுக்க நேர்ந்தது.
அப்பொழுது அங்கு வந்த ஸ்ரீ கிருஷ்ணன் சிவனுக்கு உதவுவதாக கூறினார். சிவனும் பார்வதியும் விளையாட கிருஷ்ணனின் மாயையால் சிவன் வெற்றி பெற்று தான் இழந்த பொருட்களை திரும்ப பெற்று விட்டார். இந்த சூழ்ச்சியை அறிந்த பார்வதி மிகவும் கோபமடைந்தார்.
அப்பொழுது கிருஷ்ணன் அவரிடம் கோபம் கொள்ள வேண்டாம் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் மாயையே. நாம் உண்ணும் அன்னத்தை தவிர என்றார்.ஆனால் இதை பார்வதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவருக்கு அன்னத்தின் அருமையை உணர்த்த உலகத்தில் எங்கும் அன்னம் கிடைக்காத படி செய்து விட்டார். இச்சமயத்தில் சிவனுக்கு பசி எடுக்கவே உணவை தேடி அடைந்தார்.
ஆனால் பார்வதி தேவி யாசகம் வாங்க செல்ல மறுத்துவிட்டார். பிறகு குழந்தைகளுக்கும் பசி எடுக்கவே இருவரும் அன்னம் யாசகம் கேட்க காசியில் உள்ள அன்ன பூர்ணியிடம் சென்றனர்.
திரும்பி வந்தவர்கள் பார்வதி தேவி அன்னத்தின் அருமையை உணர்ந்து கொண்டார். உலகம் முழுவதும் உணவை உருவாக்க செய்தனர் என்று கூறுவர். எனவே தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் நாமும் செய்து சந்தோஷமாக வாழலாமே..!