தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், லிபியா உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீவிரவாத அமைப்புகள் தொடர்பான 2016 – ம் ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அதில் லஷ்கர் இ தொய்பா, ஜெயிஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்து தான் செயல்படுவதாகவும், இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் இந்தியாவிற்கு எதிரான நாசவேலைகளை செய்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான்கள், தெஹரிக் இ தாலிபான், ஹக்கானி போன்ற அமைப்புகளும் பாகிஸ்தானில் இருந்து தான் உருவாகின்றன. தீவிரவாதிகளை ஒடுக்குவதில் போதிய அளவிற்கு நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் தயங்குகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா அளித்துள்ள இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈரான், லிபியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், ஏமன், கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் உள்ளன.