தமிழக சட்டப்பேரவையின் அனைத்து துறை மீதான மானிய கோரிக்கை கூட்டத்தொடரானது நேற்று முடிவடைந்த நிலையில், இன்று சட்டபேரவை அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
அதற்கான காரணம், இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தினகரன் சிறை செல்வதற்கு முன்பே சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை கட்சி ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த தினகரன் சசிகலாவை சந்தித்து விட்டு, குடியரசு தேர்தலுக்கு பின்பு எங்களது செயல்பாட்டை காண்பீர்கள் என எடப்பாடி அரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். அதே போல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த சில நாட்களில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வான தோப்பு வெங்கடாச்சலத்தின் அவைக்குழு உறுப்பினர் பதவியை செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே பன்னீர் தலைமையில் ஓர் எம்எல்ஏக்கள் குழு செயல்பட்டு வருகையில் தினகரன் அணியின் இத்தகைய நடவடிக்கை ஆட்சிக்கவிழ்ப்பினை ஏற்படுத்தும் என்கின்றனர் அதிமுகவின்.