கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில் அருகில் உள்ள கடையில் நின்ற மூவர் காயமடைந்தனர்.
அதில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
குறித்த குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த குடும்பம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.