Loading...
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது நிறைவுக் கொண்டாட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாக அழைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் அக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் பொரளை கெம்பல் மைதானத்தில் நடந்தபோதும் ஜனாதிபதி மைத்திரிபால அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
Loading...
கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், ஆண்டு விழா நடைபெறவுள்ள இடம் பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...