யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்ற சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவியதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணியை இடைநிறுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரை யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததன் பின்னர் அவர் தப்பிச் செல்ல உதவியதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.