பெண்களை பொறுத்த வரையில் தந்தையும் கணவனும் தான் கண்கண்ட தெய்வங்கள் ஆவார்கள்.கணவனின் இழப்பு என்பது ஒரு பெண்ணை பொறுத்தவரையில் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு ஆகும்.கம்போடியாவை சேர்ந்த பெண்ணொருவர் தனது இறந்து போன கணவரின் நினைவாக கன்றுக்குட்டியுடன் வாழந்து வரும் வினோத சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் சிலவருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். ஒரு நாள் இந்த பெண்ணின் கனவில் வந்த இறந்த கணவர் நான் எங்கள் வீட்டில் வளர்க்கும் கன்று குட்டியின் உடலில் இருப்பதாக கூறியுள்ளார். தான் கண்ட கனவு பற்றி இந்த பெண் தனது பிள்ளைகள் மற்றும் அயலவர்களிடம் கூறிய போது அவர்களும் அதனை நம்பியுள்ளார்கள் .
இதனால் தொழுவத்தில் இருக்க வேண்டிய கன்று குட்டி தற்போது மெத்தை, தலையணையுடன் கூடிய சகல வசதிகளுடன் வீட்டின் உள்ளே வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த கன்று குட்டியின் பொழுதுபோக்கிற்காக டிவியும் வழங்கப்பட்டுள்ளதாம்.