அண்மைக்காலமாக உலக நாயகன் கமல் தனது அதிரடி கருத்துக்களால் தமிழக அரசிய வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றார். அதிமுக அரசில் இடம்பெறும் ஊழல் சம்பவங்களை தட்டிக்கேட்டு அதிமுக அரசியல்வாதிகளின் முகமூடிகளை கிழித்து எறிந்து வருகின்றார்.டுவிட்டரில் ஒவ்வொருநாளும் அதிரடியாக டுவிட் செய்து நெட்டிசன்களை பரபரப்பாக்கியுள்ளார் கமல்.
இந்நிலையில் கமல் தனது லேட்டஸ்ட் டுவிட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசு வீட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். மேலும்,நான் பள்ளிப் படிப்பை முடிக்காததால் எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் பற்றி நன்றாகவே புரியும். டெங்கு காய்ச்சல் என் மகளுக்கு வந்ததால் அதைப்பற்றி தெரியும். டெங்கு காய்ச்சலை அரசு கவனிக்க வேண்டும். இல்லையேல் நான் உங்களை கவனிப்பேன் என்று கூறி அதிமுக அரசியவாதிகளை கடுமையாக சாடியுள்ளார் .
கமலின் அதிரடி கருத்துக்களால் ஏற்கனவே ஆடிப்போயிருக்கும் அதிமுக அரசு கமலின் இந்த கருத்தினால் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளதாம்.