தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளதால் இன்னும் சில தினங்களில் அரசாங்கத்திற்கு இந்த அதிர்ச்சி காத்திருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பைத் தடுப்பதே தமது திட்டம் எனவும் ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும், மற்றைய அணி வெளியேறியும் இந்நிலைப்பாடு ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும், ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.