உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காத விசித்திர நோயால் பத்து வயது சிறுவன் ஒருவன் பாதிக்கப்பட்டுள்ளான்.
தென்ஆப்பிரிக்காவின் Mpumalanga மாகாணத்தை சேர்ந்தவர் Zola. இவர் மகன் Caden Benjamin (10) Prader-Willi syndrome என்னும் விசித்தர நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.
அதாவது, Caden எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. மேலும் எதாவது சாப்பிட்டு கொண்டே இருக்கிறான். இந்த அரிய வகை நோயால் உலகில் 20000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்து வயதிலேயே Caden, 90 கிலோ எடையுடன் உள்ளான். சில வருடங்களுக்கு முன்னர் சிறுவனுக்கு அதிக எடை காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது Caden-ன் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் மூலம் அவன் சுவாசிக்கிறான்.
இது குறித்து சிறுவனின் தாய் Zola கூறுகையில், அதிக பசி காரணமாக Caden கழிவறையில் இருக்கும் டாய்லட் பேப்பர்கள் மற்றும் வீட்டில் இருக்கும் எல்லா வித பேப்பர்களையும் கூட சாப்பிடுவான்.
சாப்பிட எதுவும் கிடைக்காத நேரத்தில் தரையில் இருக்கும் அழுக்குகளை கூட எடுத்து சாப்பிடுவான் என கூறியுள்ளார்.
இந்த நோய்க்கு இதுவரை மருந்துகளே கண்டுபிடிக்கபடவில்லை. காலை வேளையில் சீஸ் துண்டுகள் நான்கு சாப்பிடும் Caden பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கோக் குடிக்கிறான்.
பிறகு கிடைக்கும் உணவை சாப்பிடும் Caden மதிய உணவின் போது சிக்கன் சாப்பிடுகிறான். அதன் பின்னர் கிடைப்பதை நாள் முழுவதும் சாப்பிடுகிறான்.
Cadenனுக்கு பயந்தே அவன் தாய் வீட்டில் உள்ள உணவுகளை அவன் கண்ணில் படாதபடி மறைத்து வைத்து விடுகிறார்.
Cadenன் எடை அதிகரித்து கொண்டே செல்வதால் அவன் இனி உயிர் வாழ டயட்டில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஓவ்வொரு நாளும் போர்களமாக செல்வதாகவும், Caden-ஐ ஒவ்வொரு நொடியும் தான் கண்காணித்து கொண்டே இருப்பதாகவும் Zola சோகத்துடன் கூறியுள்ளார்.