ஆடிச் செவ்வாய் எனக் கூறி கோயிலுக்கு சென்ற தனது மனைவி கோயில் தர்மகர்த்தாவுடன் கோயிலு்ககுள் வைத்து அந்தரங்கமாக இருப்பதை அறிந்த கணவன் அங்கு சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கிய சம்பவம் யாழ் xxxcப்பகுதியில் நேற்று பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கோவிலில் ஆடிச் செவ்வாய் என கூறி கும்பிடச் சென்ற தனது மனைவி அங்கு கோவிலு்ககு பொறுப்பாக உள்ள ஒருவருடன் இரகசிய தொடர்பில் இருப்பதாக கணவருக்கு தகவல் பறந்துள்ளது.
தகவலையடுத்து அக் கோயிலு்ககு சென்ற கணவன் அங்கு மனைவியும் தர்மகர்த்தாவும் தனிமையில் இருப்பதை அவதானித்துள்ளார்.
அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியதுடன் கோயில் தர்மகர்த்த அரை நிர்வாண நிலையில் கோயிலை சுற்றி சுற்றி ஓடியதாகவும் இருப்பினும் பெண்ணின் கணவர் அவரை விடாது கடுமையாகத் தாக்கியதாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலையில் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் கடுமையான இரத்தக் காயங்களுடன் தர்மகர்த்தாவ அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் இருந்து மீட்டு யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு சென்றதாகவும் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவில்லை எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்மகர்த்தாவை கணவர் குறி வைத்து தாக்குதல் நடாத்திக் கொண்டிருக்கி குறித்த பெண் அங்கிருந்து அரைகுறை ஆடையுடன் தப்பி ஓடிவிட்டார் எனத் தெரியவருகின்றது.
இன்று காலை குறித்த பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்திருந்த தாயாரும் பெண்ணின் தம்பியாரும் கணவரால் அவர்களது வீட்டில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
கணவர் அப்பகுதியி்ல் முன்னர் ஆளுமை செய்த கட்சி ஒன்றின் முன்னாள் உறுப்பினர் எனவும் தர்மகர்த்தா தற்போது அப்பகுதியை ஆளும் கட்சி ஒன்றின் ஆதரவாளர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவி்த்தனர்.