மேஷம்
தைரியத்தோடு முடிவெடுக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். ஆரோக்கியம் சீராகும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பகை மாறும்.
ரிஷபம்
தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வருமானம் திருப்திதரும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிட்டும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம்உண்டு.
மிதுனம்
நல்லவர்கள் நாடி வந்து உதவும் நாள். சுபச் செய்திகள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக திகழ்வீர்கள்.
கடகம்
செல்வ செழிப்பு மேலோங்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். உங்களின் எண்ணங்கள் ஈடேற இல்லத்தார்களின் உதவி கிட்டும். கடிதம் கனிந்த தகவலைத் தரும்.
சிம்மம்
நம்பிக்கையோடு செயல்படும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சீராகும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள்.
கன்னி
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சினைகள் விலகும். வியாபார முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இலாகா மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகும் சந்தர்ப்பம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த இன்னல்கள் தீரும். கையில் சரளமாக பணப்புழக்கம் ஏற்படும்.
விருச்சிகம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் ஏற்படும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். வருமானம் திருப்தி தரும். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
தனுசு
விட்டுக் கொடுத்துச் செல்வதால் வெற்றி கிட்டும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தில் பகை ஏற்படலாம். வியாபாரம், தொழிலில் இருந்த ஏற்ற இறக்கமான சூழ்நிலை ஏற்படும்.
மகரம்
உறவினர் பகை அகலும் நாள். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். கடன் சுமை குறைய நண்பர்கள் வழிவகுப்பர். விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
கும்பம்
கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். துரோகம் செய்ய நினைத்தவர்கள் தூர விலகுவர்.
மீனம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பொருள் சேர்க்கை உண்டு. கல்வித் தடை அகலும். வரவு திருப்தி தரும். பெற்றோர்கள் பாசமழையில் நனைவீர்கள். வளர்ச்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்..