கடந்த ஆட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவினால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு, அரச காணிகள் விற்பனை செய்தமை தெரிய வந்துள்ளது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டல் நிறுவனத்திற்கு, கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள 2.4361 ஹெக்டெயர் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் வாடகை அடிப்படையின் கீழ் இந்த காணிகள் வழங்கப்பட்டதாக கடந்த அரசாங்கத்தினால் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன.
இலங்கை குடிமக்களுக்கு அனைத்து உரிமையும் கொண்ட குறித்த காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உரிமை பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அந்த காணியிலுள்ள பெற்ரோலியம், நீர் மற்றும் அனைத்து வளங்களும் குறித்த ஹோட்டல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் செயலாளர் லலித் வீரதுங்கவின் கையொப்பத்தில் இந்த காணி 8,250 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.