யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பிரதான சந்தேகநபருடன் குறித்த இருவரும் நேற்றைய தினம் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.