Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டார் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச, மாகாண சபை அமைச்சர் ஒருவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.
Loading...
இது குறித்து தனது டுவிட்டார் பக்கத்தில் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் சந்திக்கவில்லை எனவும் சந்திப்பதற்காக நோக்கமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இலங்கை ஊடகங்கள் ஏன் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading...