கனடா நாட்டில் நடைபெற்ற இந்து கோயில் நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளார்.
ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள BAPS Mandir என்ற கோயில் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
10-வது ஆண்டை கோலாகலமாக கொண்டாடும் வகையில் இந்து அமைப்பினர் நேற்று சிறப்பு பூஜை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்விற்கு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ இந்திய உடையான குர்தா மற்றும் பைஜாமா அணிந்துக்கொண்டு பங்கேற்றுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்களுடன் இணைந்து பிரதமரும் கோயிலில் பூஜை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha என்பதன் சுருக்கம் தான் BAPS என அழைக்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ கோயிலின் கட்டுமானப்பணியை மிகவும் வியந்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்நிகழ்ச்சி குறித்து தனது டுவிட்டர் பக்கதில் ஜஸ்டின் ட்ரூடோ பதிவு வெளியிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கனடா நாட்டிற்கான இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூபும் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.