Loading...
ரயன் ஜயலத் என்ற மருத்துவப் பீட மாணவனின் பிரச்சினையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவது அரசியல் நடவடிக்கை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
Loading...
ரயன் ஜயலத் என்ற மாணவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருக்கின்றன என பொலிஸார் கூறியுள்ள நிலையில், மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசாங்கம் எந்த வகையிலும் அடக்குமுறையை பயன்படுத்தாது எனவும் வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டு வராது எனவும் ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.
Loading...