Loading...
வட மாகாண தனியார் பேரூந்துகள் இன்று திங்கட்கிழமைநீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து பணி புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமை போன்று உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இன்று பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகின்றமையால் மாணவர்கள், ஆசிரியர்களின் தேவை கருதி இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக போக்குவரத்து சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இதேவேளை முச்சக்கர வண்டி சங்கங்களும் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தரிப்பிடங்களில் கறுப்பு கொடிகள் கட்டியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து பனரும் கட்டப்பட்டுள்ளது.
Loading...
Loading...