புற்றுநோயின் தாக்கத்தால் தனது காலை இழந்துவிட்டாலும் மிகவும் தன்னம்பிக்கையோடு வலம் வருகிறார் கிறிஸ்டி லாயல்.
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டி லாயல் என்ற பெண்ணுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு காலின் சுண்டுவிரல் உணர்வற்றதாக இருந்துள்ளது.
பின்னர் அது மெல்ல பரவி 2011 முதல் 2014 வரையிலான நான்கு ஆண்டுகளில் பாதி கால் உணர்வற்றதாக மாறிவிட்டிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு நோய் பாதிப்பு ஏற்பட்ட அதே வலது காலில் வீக்கம் ஏற்படவே மருத்துவர்களை சந்தித்துள்ளார் . அப்போது தான் அவருக்கு புற்றுநோய் கடைசி கட்டத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.
உடலின் மற்ற பாகங்களிலும் புற்றுநோய் பரவாமல் தடுக்க, வலது காலை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்திய மருத்துவர்கள், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதற்கான அறுவை சிகிச்சை செய்து காலை நீக்கியுள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட எனது காலை எனக்கே தந்துவிடுங்கள் என மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை ஏற்ற மருத்துவக் குழு நீக்கப்பட்ட காலின் எலும்பை சுத்தம் செய்து, கெடாமல் இருக்க பூச்சுக்கள் அடித்து நினைவுப்பரிசாக கொடுத்தனர்.
அந்த எலும்பு காலை வைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது தன்னம்பிக்கையை பதிவு செய்துள்ளார்.