தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அதன் பின் இவர் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார்.
இவரின் முயற்சியால் கூகுள் நிறுவனம் வலுவான வளர்ச்சி, கூட்டுமைப்புகள் மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் அவருக்கு இயக்குநர் குழுமத்தில் ஒருவராக பதவி உயர்வு அளித்துள்ளது.
மேலும் அவர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக தொடர்ந்து செயல்படுவார் என்றும் கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ லாரி பேஜ் கூறுகையில், தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் குழுமத்தில் அவருடன் இணைந்து பணி புரிய ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.