ஆடி மாதம் கடவுள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் வரும் சில முக்கிய விரத நாட்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜூலை 27 – சதுர்த்தி விரத தினம். இன்று காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய மிகவும் சிறந்த தினமாகும்.
ஜூலை 28 – கருட பஞ்சமி. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. ஆடி 2-வது வெள்ளிக்கிழமை.
ஜூலை 29 – சஷ்டி விரதம்
ஜூலை 30 – இன்று சூரிய வழிபாடு நல்லது. ஆரோக்கிய குளியலுக்கு உகந்த நாள்.
ஜூலை 31 – ஆடி சுவாதி
ஆகஸ்டு 1 – மதுரை மீனாட்சி அம்மன் தங்கக் குதிரையில் புறப்பாடு. ஆடி மூன்றாவது செவ்வாய்.
ஆகஸ்டு 2 – திருப்பதி ஏழுமலையானுக்கு சகஸ்ரகலாபிஷேகம்
ஆகஸ்டு 3 – ஆடி 18-ம் பெருக்கு. அனைத்து நதிகளையும், பெண்ணாக கருதி இன்று வழிபாடுகள் நடைபெறும் சர்வ ஏகாதசி.
ஆகஸ்டு 4 – வரலட்சுமி விரத தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்மன் ரத உற்சவம். ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை.
ஆகஸ்டு 5 – சனி பிரதோஷம். இன்று கருட தரிசனம், விஷ்ணு வழிபாடு, நந்தி தரிசன வழிபாடு ஆகியவை நல்லது. திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு தேரில் வீதி உலா.
ஆகஸ்டு 6 – சங்கரன்கோவிலில் ஆடி தபசு.
ஆகஸ்டு 7 – ஆடி பவுர்ணமி. இன்று திருவண்ணா மலை யில் கிரிவலம் வந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபமும், தனியார் பணிகளில் இருப்பவர்களுக்கு புகழும் கிடைக்கும். திருவோண விரதம். ஆவணி அவிட்டம்.
ஆகஸ்டு 8 – ஆடி 4-வது செவ்வாய்க்கிழமை. காயத்ரி ஜெபம் செய்ய வேண்டிய தினம்.
ஆகஸ்டு 9 – செவ்வாய்ப்பேட்டை மாரியம்மனுக்கு பொங்கல். திருப்பதி ஏழுமலையானுக்கு சகஸ்ர கலாபிஷேகம்.
ஆகஸ்டு 10 – சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஊஞ்சலில் காட்சி.
ஆகஸ்டு 11 – ஆடி 4-வது வெள்ளிக்கிழமை. மகாசங்கடஹர சதுர்த்தி, இருக்கன்குடி மாரியம்மன் பெருவிழா.
ஆகஸ்டு 12 – இன்று கருட தரிசனம் செய்வது நல்லது.
ஆகஸ்டு 13 – இன்று சூரிய வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
ஆகஸ்டு 14 – கிருஷ்ணஜெயந்தி, திருப்போரூர் முருகன் அபிஷேகம், சங்கரன்கோவில் புஷ்ப பாவாடை தரிசனம்.
ஆகஸ்டு 15 – ஆடி மாதம் இறுதி 5-வது செவ்வாய்க் கிழமை. ஆடி கிருத்திகை விரத தினம்.
ஆகஸ்டு 16 – ஆடி கடைசி தினம். இன்று வானில் கிழக்கு பகுதியில் சுக்கிரன் பிரகாசித்து, மகம் முதல் 5 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும்.