ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்களின் உரிமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச , தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
துறைமுக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
உரிய நடைமுறைகள் இன்றியும், நாடாளுமன்றத்தை தெளிவுப்படுத்தாமலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமலும் சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்காக உடன்படிக்கையில் கையெழுத்திட பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்கள் மூலம் அறிய கிடைத்தது.
இதனால், மாகம்புர துறைமுக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க நேரடியாக தலையிடுமாறு அமைச்சர் ஜோன் செனவிரட்னவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தை இந்த கடிதத்துடன் இணைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தனது கடிதத்தில் கூறியுள்ளார்.