உலகநாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாது ஆயுத சோதனைகளை முன்னெடுத்துவரும் வடகொரியா, புதிய கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
ஜப்பான் கடல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த ஏவுகணை சோதனையை வடகொரியா முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த ஏவுகணை 47 நிமிடங்கள் 12 விநாடிகள் 3,724.9 கிமீ உயரத்தில் பறந்து 998 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கொரிய போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 64வது தினமான ஜூலை 27ஆம் திகதியை, வெற்றி தினமாக கொண்டாடி வரும் வடகொரியா, இத்தினத்தை முன்னிட்டு ஏவுகணை சோதனை நடத்த கூடுமென ஏற்கனவே முன்னுரைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.