அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மற்றும் மருந்துகள், குடிக்கும் தண்ணீர், நாம் சுவாசிக்கும் காற்று போன்றவை காரணமாக ஏற்படும் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள், நமது உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே நம் உடலில் உள்ள கிருமிகளை இயற்கையான வழியில் வெளியேற்றி, புத்துணர்ச்சியை உண்டாக்க, டிடெக்ஸ் (Detox) குளியல் முறை பெரிதும் உதவுகிறது.
டிடெக்ஸ் குளியல் முறை என்றால் என்ன?
டிடெக்ஸ் குளியல் என்பது இஞ்சி குளியல் முறை ஆகும். இந்த குளியல் முறையை பின்பற்றுவதால், உடலை தாக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, அழற்சி, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இஞ்சி குளியல் முறையை எப்படி எடுக்க வேண்டும்?
1/2 கப் இஞ்சி அல்லது ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பவுடர் மற்றும் 1 கப் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும், மிதமாக உள்ள சூடு நீரில் கலந்து, 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும்.
குறிப்பு
இந்த இஞ்சி குளியல் முடித்த, ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக அளவு வியர்வை வெளியேறும். எனவே இந்த குளியலை இரவில் எடுப்பது சிறந்தது. இதனால் சரும துளைகள் விரிவடையும். ஆனால் சோப்பு மற்றும் ஷாம்புகளை பயன்படுத்தக் கூடாது.