நகங்கள் கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும்.
பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது.
நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும், நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.
சிலருக்கு நகங்கள் திடீரென்று உடைந்து போகும், இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணமாகும். இதற்கு நாம் உணவில் கால்சியம் சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.
நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
நகம் வெட்டும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட முடியும்.
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.
நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள் சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால் நகங்கள் உறுதியாகும்.
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
நகங்களை பராமரிக்க எளிய முறைகள்
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
அதே போல் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் மறையும்.
இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
கடினமான நகங்கள் இருப்பவர்கள், இரவில் படுக்கும் முன் நல்லெண்ணையை நகங்களுக்குப் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால், நகங்கள் மிருதுவாகவும் பளப்பளப்பாகவும் மாறிவிடும்.
தரமான நகப்பூச்சுக்களை தேர்ந்தொடுத்து பூசுவது நல்லது.