இராணுவச் சட்டத்தின் படி ஒரு நபர் துப்பாக்கியைப் பறிகொடுத்தால் அவருக்கு பதவி குறைப்புச் செய்யப்படுவதே வழமையெனவும், மேல் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரான ஹேமரத்னவுக்கு இராணுவச் சட்டத்திற்கு மாறாக பதவி உயர்வு வழங்கப்பட்டது சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக மன்னார் மாவட்ட இளைஞரணிச் செயற்பட்டாளர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? எனும் தலைப்பில் வவுனியாவில அரசியல் கலந்தாய்வு கூட்டமொன்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவகரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நீதிபதி இளஞ்செளியன் வீதியில் இடம்பெற்ற சலசலப்பை பஞ்சாயத்து பார்க்கப்போய் அதில் காவலுக்கு சென்ற பொலீஸ் தனது துப்பாக்கியை பறிகொடுத்ததையும் அவ்வாறு துப்பாக்கியை எதிரியிடம் பறிகொடுப்பவருக்கு இராணுவ சட்டப்படி பதவி குறைப்பே இடம்பெறுவது என்றும் மாறாக இங்கே பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் கேடு கெட்ட நிலைக்கு தமிழினம் வந்துள்ளது.
அத்தோடு இளஞ்செளியன் இலக்கு இல்லையென்றும் சொல்லப்படுகிறது, இளஞ்செளியன் முதல்வர் ஆகப்போகின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது இவ்வாறான ஒரு அரசியல் இவ்வாறு கடமையை சரியாக செய்யாத காவல்துறைக்கு எப்படி பதவி உயர்வு வழங்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.