நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில்
நல்லுார் முருகன் மீது கடும் மோகத்தில் உருவாடிய பெண் ஒருவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு யாழ் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்தார். குறித்த பெண் நல்லுார் உள்வீதியில் கலையாடியதுடன் தனது உடையை களையை முற்பட்ட வேளை அங்கு நின்ற பொலிசாரால் பிடிக்கப்பட்டார்.
அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்த கொண்டு சென்ற போது நீதிமன்றினுள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.
”நீதவானே!! என்னை ஏன் பொலிசார் கைது செய்தார்கள்!! கேளுங்கள் ஐயா!! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. முருகனை நினைத்து கோயிலுக்கு சென்று அங்கு எனது தாவணியை கழற்றி பாட்டுப் பாடி ஆட முற்பட்டது தவறா?
இவ்வாறு நீதவானிடம் கேள்வி கேட்டு கத்திக் குளறியுள்ளார் குறித்த பெண். இதனையடுத்து நீதவான் அப் பெண்ணை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஏற்கனவே இரு பெண்டாட்டிகள் நல்லுார் முருகனக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.