Loading...
நாவல் பழச்சாறை உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் குறித்து, நியூசிலாந்தில் உள்ள Plant and Research Institute-ஐ சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.
அந்த நாவல் பழத்தில் உள்ள விட்டமின் C, ப்ளேவினாய்டு மற்றும் நாவல் பழத்திற்கு ஊதா நிறத்தை அளிக்கும் ஆந்தோசயனின்ஸ் எனும் பொருள் போன்றவை பல்வேறு பிரச்சனைகளை தடுக்க உதவுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
Loading...
அவர்களின் ஆராய்ச்சியின் படி, நாவல் பழத்தின் சாறை பருகுவதால், கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம்.
நாவல் பழ சாற்றின் நன்மைகள்?
- உடற்பயிற்சி செய்வதற்கு முன், பின் நாவல் பழச்சாற்றின் சில சொட்டுகள் சாப்பிட்டால், தசைகளில் சேதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- தசைப்பிடிப்பு, அழுத்தம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் உடற்பயிற்சி செய்த பின் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
- நாவல் பழச்சாறை 3 வாரங்களுக்கு சிறிதளவு சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- உடல் சோர்வு, நுரையீரல் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நாவல் பழச்சாறு தடுக்கிறது.
- ஆண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மை மற்றும் தசைகளில் ஏற்படும் எரிச்சல், போன்ற பிரச்சனைகளை குணமாக்க நாவல் பழத்தின் சாறு பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
Loading...