ஜூலியை கார்னர் செய்து மக்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் ஆர்த்தி. ‘ஜூலி ஒரு ஃபேக்’ என 50 தடவையாவது அந்நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பார். இதனாலேயே மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஆர்த்தி, மிகக் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்டார். வெளியேறிய போது கூட, ஜூலியை பார்த்து போலியாக நடிக்காதே என்று கூறி விட்டுத் தான் சென்றார். அப்போதும், மக்கள் அதை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்க, இன்று நிலைமையே வேறு…
ஜூலியின் அற்புதமான கேரக்டரை பிக்பாஸ் நேயர்கள் தினம் தினம் பார்த்து அவரை திட்டித் தீர்த்து வருகிறார்கள். அதிலும், தனக்கு ஆதரவாக, தான் வேதனைப்பட்டு அழுத போது ஆறுதல் சொன்ன ஒவியாவை பற்றியே திரித்துப் பேசி… அப்பப்பா!! கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க ஜூலி.
ஜல்லிக்கட்டிற்காக மெரீனாவில் இறங்கி “கலா சலா கலசலா… வெளியே போ சசிகலா” என்று போராடியதால், “வீரத் தமிழச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஜூலி, நேற்று பிக்பாஸ் இல்லத்தில் நடத்தப்பட்ட “பைத்தியம்” டாஸ்க்கில் மீண்டும் ஜல்லிக்கட்டைப் போல ஒரு அறப்போராட்டம் நடத்தினார். (இவரை வீரத் தமிழச்சி என்று கூறியவரை புலன் விசாரணை வைத்து தான் தேட வேண்டும்) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜூலியின் அருகில் நின்று அவருடன் சேர்ந்து கோஷம் போட்டவர்கள், நேற்று பிக்பாஸ் பைத்தியம் டாஸ்கில் ஜூலி நடத்திய போராட்டத்தைப் பார்த்து நிச்சயம் வெட்கித் தலை குனிந்திருப்பர்.
இது ஒருபக்கம் எனில், ஆரவ் – ஓவியா பிரச்சனை தான் இப்போது பிக்பாஸின் ஹாட் டாபிக். ஓவியாவால் தன்னுடைய சுய மரியாதை பாதிக்கப்படும் என்கிறார் ஆரவ். “அனைவரும் பார்க்கும் போது வந்து உரசுறா… சும்மா சும்மா என்னை சுத்தி வந்துக்கிட்டே இருக்கா… இவளால் என் இமேஜ் டேமேஜ் ஆகிடுமோ-னு பயமா இருக்கு” என்கிறார் ஆரவ். அப்போ தனியா இதெல்லாம் செய்தால் ஓ.கே. என்பாரா என்று தெரியவில்லை.
எப்படியெல்லாம் ஓவியாவை அசிங்கப்படுத்தலாம் என காத்துக் கொண்டிருக்கும் காயத்ரி & டீம், இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்து விவாதித்துக் கொண்டிருக்கிறது.
இது உண்மையில், பெரிய விஷயம் தான். ஆனால், ஆரவ்வும் ஓவியாவும் தனியாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம். இது ஆரவ்வால் தற்போது பகிரங்கமாக்கப்பட்டு வருகிறது. (இது எங்க போய் முடியுமோ தெரியவில்லை… எல்லாம் பிக்பாஸுக்கே வெளிச்சம்)