நல்லூர் ஆலய சுற்றாடலில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டாலும் சிலர் தடையை மீறியும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் பொ.வாகீசன்.
தடை உத்தரவை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிலையங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக சில வியாபார நிலையங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன.
கச்சான் கடைகளில் கச்சான்கள் யாவும் கடதாசிப் பைகளிலேபோட்டு வழங்க வேண்டும். பொலித்தீன் பைகளில் போட்டு வழங்குவதைக் கச்சான் வியாபாரிகள் நிறுத்த வேண்டும்.
ஆலய சூழலில் உள்ள வியாபார நிலையங்களில் அர்ச்சனை பொருள்கள் யாவும் பனம் ஓலையால் தயாரிக்கப்பட்ட தட்டுக்களிலேயே வைத்து வழங்கப்பட்டும் வருகின்றன.
இதை பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தடை உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்கும் முகமாக ஆலயச் சூழலில் உள்ள வியாபார நிலையங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் – என்றார்.