அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர்களுக்கென தனி மரியாதை உண்டு என்று அவுஸ்திரேலியா நாட்டு தமிழறிஞர் சுவாமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழர்கள் குறித்த சிறப்பு சொற் பொழிவு தமிழியல் புலத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழர்களுக்கென தனி மரியாதை உண்டு. அவர்கள் பேசும் தமிழ்மொழி தூய்மையானது.
தமிழ் கடவுள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
தமிழர்கள் இடையூறு இன்றி சுதந்திரமாக வாழக் காரணம் உழைப்பு, திறமை, அறிவுசார் முதிர்ச்சி மட்டுமே.” என அவுஸ்திரேலியா நாட்டு தமிழறிஞர் சுவாமி சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.