சமுர்த்தி நிவாரணம் கோரி மூன்றுநாள்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமது முறைப்பாடுகளை பிரதேச செயலகத்தில் கையளித்துள்ளனர் என்று பிரதேச செயலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
தென்மராட்சி பிரதேசத்தில் சமுர்த்தி நிவாரண மீளாய்வு செய்யப்பட்ட பட்டியல் கடந்த சனிக்கிழமைஅனைத்து சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அலுவலகங்கள் கிராம அலுவலர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக முறைப்பாடு செய்வோர் 15 தினங்களுக்குள் முறைப்பாடுகளை பிரதேச செயலகத்தில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலர் அறிவித்திருந்தார்.
வரணிப் பிரதேசத்தில் சமுர்த்தி நிவாரணம் கிடைக்காதோர் வரணி சமுர்த்தி அலுவலகத்தை மூடி போராட்டம் நடத்தியிருந்த போதிலும் ஏனைய பிரிவு மக்கள் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் முறைப்பாடுகளை பிரதேச செயலகத்தில் கையளித்துவருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பா டுகள் கிடைக்கலா மென எதிர்பார்ப்பதாக சமுர்த்திப் பிரிவினர் தெரிவித்தனர்.
தென்மராட்சி பிரதேசத்தில் சமுர்த்தி நிவாரணத்துக்குச் சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கொழும்பு சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் விண்ணப்பித்த குடும்பங்க ளுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 258 பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகத்துக்கு அனுப்பியிருந்தனர்.
தற்போது கிடைக்கும் முறைப்பாடுகளுக்கமைய மீள்பரிசீலனை செய்யப்பட்டுத் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை சமுர்த்தி அலவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நடை முறைக்கு வருவுள்ளது. அதுவரை தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுமென்றும் செயலகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.