யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகள் ஆடி பயறு செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆடி பயறு செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு பரவலாக அநேகமான விவசாயிகளுக்கு பயறுகள் இலவலச மாக விவசாயத் திணைக்களத் தால் விநியோ கிக்கப்பட்டுள் ளன.
ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்று கிலோ என்ற அடிப்படையில் பயறு வழங்கப்பட்டுள்ளது. தொல்புரத்தில் 25 விவசாயிகளுக்கும். சண்டிலிப்பாயில் 17 பேருக்கும், உரும்பிராயில் 24 பேருக்கும் சாவகச்சேரியில் 25 பேருக்கும் எழுதுமட்டுவாளில் 25 பேருக்கும் கரவெட்டியில் 25 பேருக்குமாக மொத்தம் 141 செய்கையாளர்களுக்கு பயறு வழங்கப்பட்டுள்ளது.
அதனைவிட தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் ஊடாகவும் 20 பேருக்கு தலா இரண்டரை கிலோபடி பயறு வழங்கப்பட்டுள்ளன.
ஆடி மாத பயறு செய்கையை ஊக்குவிக்கும் முகமாகவே பயறு செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் பயிர்ச் செய்கையைத் தற்போது ஆரம்பித்துள்ளனர் என்று மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வ ராசா தெரிவித்தார்.