யாழ். குடாநாடு உள்ளிட்ட வடபகுதியில் பாரிய வறட்சி நிலை ஏற்படும் என அண்மைய ஆய்வுகளை கொண்டு தகவல் வெளியாகியுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக யாழ். குடாநாடு உள்ளிட்ட வடபகுதி மக்கள் இவ்வாறு அதிக வெப்பத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2100ஆம் ஆண்டளவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உட்பட தெற்காசிய நாடுகளின் வெப்பம் நூற்றுக்கு 35 செல்சியஸ் பாகை வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்த வெப்பம், அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வளியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 8 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.