Loading...
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்துக்கு தடைகோரி, சென்னை 4-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜசேகரனை யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்துடன் உள்ள தொடர்பை நிரூபிக்கும் விதமாக சில புகைப்படங்களை ராஜசேகரன் தாக்கல் செய்தார்.
Loading...
இதையடுத்து இந்த வழக்கின் இருதரப்பு வக்கீல்களின் வாதங்களுக்காக, விசாரணையை 8-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Loading...